இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்கள் கற்கும் முறை

படம்
  ஆசிரியரிடம் பாடம் கேட்ட பின்னர், பாடநூலை மாணவன் எவ்வாறு பயில வேண்டும் என்று நன்னூல் விளக்குகிறது. நூல்பயில் இயல்பே நுவலின் வழககறிதல் பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் ஆசான் சார்ந்தவை அமைவரக் கேட்டல் அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மடநனி இகக்கும். ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பின் பெருக நூலில் பிழைபா டிலனே.  முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்  ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் காற்கூ றல்லது பற்றல னாகும். - நன்னூல் 44 மாணவன் தான் பயின்ற நூலின் வழக்கு, உலக வழக்கு ஆகியனவற்றை அறிந்துகொள்ளும் வகையில் பயிலவேண்டும்.  தான் படித்த பாடங்களை மறவாமல் போற்றுதல் வேண்டும். ஆசியரிடம் கேட்ட கருத்துகளை மீண்டும் நினைவிற்கு கொண்டுவந்து ஆராய வேண்டும். அவ்வாறு சிந்திக்கும்போது எழுந்த ஐயங்களை மீண்டும் ஆசிரியரைச் சந்தித்துக் கேட்டுத் தெளிதல் வேண்டும்.  தன்னோடு பயிலும் மாணவருடன் சேர்ந்து பயிலுதல் வேண்டும். அவ்வாறு பயிலும்போது எழும் சந்தேகங்களை அவர்களிடமே கேட்டுத் தெளிதல் வேண்டும். உடன் பயில்பவர்களின் ஐயங்களைப் போக்க உதவுதல் வேண்டும்....

மாணவர்கள் பாடங்கேட்கும் முறை

படம்
  மாணவர்கள் பாடங்கேட்கும் முறை என்ன என்பதை நன்னூல் பின்வருமாறு விளக்குகிறது. கோடல் மரபே கூறும் காலைப் பொழுதொடு சென்று வழிபடல் முனியான் குணத்தொடு பழகி அவன்குறிப் பிற்சார்ந்து இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப் பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச் சித்திரப் பாவையின் அத்தக வடங்கிச் செவிவா யாக நெஞ்சுகளன் ஆகக் கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப் போவெனப் போதல் என்மனார் புலவர். - நன்னூல் 40 ஆசிரியர் சொன்ன நேரத்தில் மாணவன் வகுப்புக்கு வரவேண்டும். முதலில் ஆசிரியரை வழிபட வேண்டும்.  ஆசிரியரின் குணமறிந்து நடந்துகொள்ள வேண்டும். ஆசிரியரின் குறிப்புணர்ந்து செயல்படவேண்டும். இவ்விடம் அமர்ந்துகொள் என்று அவர் கூறியபிறகே அமரவேண்டும். படி என்று அவர் சொல்லியபிறகே பாடத்தைப் படித்தல் வேண்டும். தாகம் கொண்டவன் தண்ணீரைக் கண்டதும் ஆர்வத்துடன் பருகுவதைப் போலப் பாடத்தில் ஆர்வம் மிகுந்தவனாக இருக்கவேண்டும். சித்திரப்பாவை போல ஆசிரியர்முன் அடக்கத்துடன் இருக்கவேண்டும். ஆசிரியர் சொல்லும் பாடம் கேட்கும்போது மாணவனுக்கு காது வாயாகவும் மனம் வயிறாகவும் இருக்கவேண்டும். முதல்நாள் ஆசிரியரிடம் கேட்டவற்றில் கொண்டுள்ள ...

நன்னூல் கூறும் மாணவர்கள்

படம்
  சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழ் இலக்கண நூல் நன்னூல். இதை இயற்றியவர் பவணந்தியார்.  அவர் படிக்கும் மாணவர்களை மூன்று பிரிவாக வகைபடுத்தி உள்ளார்.  மூவகை மாணவர்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். மூவகை மாணவர்கள்  1. முதல் மாணாக்கர் - அன்னம், பசு 2. இடை மாணாக்கர் - கிளி, நிலம் 3. கடை மாணாக்கர் - ஆடு, எருமை, பன்னாடை, ஓட்டைக்குடம்  முதல் மாணாக்கர் அன்னம் பாலும், தண்ணீரும் கலந்து இருக்கும் போது , பாலை மட்டும் குடிப்பது அன்னப்பறவை. அது போல் "மெய்பொருள் காண்பது அறிவு" என்ற வள்ளுவன் சொல்லுக்கேற்ப தேவை இல்லாததை விட்டு விட்டு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளும். பசு   புல் கிடைக்கும் போது , அனைத்தையும் வேகமாக மேய்ந்து விட்டு பிறகு மெதுவாக அசை போட்டு (regurgitate) உண்ணும். அதாவது ஆசிரியரையோ, புத்தகத்தையோ கண்டால் அவரிடமிருந்து அனைத்து அறிவையும் வேகமாக பெற்றுக் கொண்டு பிறகு மெதுவாக ஆராய்ந்து , சிந்தித்து தெளிவு பெறுவர். இடை மாணாக்கர் கிளி   கிளி சொன்னதையே சொல்லும். அது போல் இவ்வகை மாணவன் ஆசிரியர் சொன்னதை அப்படியே கேட்டு மனப்பாடம் செய்து ஒ...

புரட்சிக் கவி - கதைச் சுருக்கம்

படம்
  மன்னன் ஒருவன் தனது மகள் அமுதவல்லி என்பவளுக்குத் தமிழ்க் கவிதை புனையும் ஆற்றலைக் கற்பிக்க விரும்பினான். அமுதவல்லிக்குத் தமிழ்க் கவிதை கற்பிக்கச் சிறந்தவன், உதாரன் என்பவன் ஆவான் என்று அமைச்சர் தெரிவித்தார். ஆனால் அவன் இளைஞன்; நல்ல அழகன் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். மன்னனின் திட்டம் இளமை வாய்ந்த அமுதவல்லியும் இளைஞனான உதாரனும் நேரில் சந்திக்கக் கூடாது என்று மன்னன் கருதினான். எனவே, அமுதவல்லி தொழு நோயாளி என்று உதாரனிடம் தெரிவித்தான். உதாரன், குருடன் என்று அமுதவல்லியிடம் தெரிவித்தான். குருடனை நேரில் பார்ப்பது அபசகுனம். எனவே இருவருக்கும் இடையில் ஒரு திரையைக் கட்டித் தொங்க விடுங்கள் என்று தெரிவித்தான். அதன்படி அமுதவல்லிக்கும் உதாரனுக்கும் இடையில் ஒரு திரை கட்டித் தொங்க விடப்பட்டது. திரைக்கு இந்தப்பக்கம் இருந்து உதாரன் கவி புனையும் திறனைக் கற்பித்தான். திரைக்கு அந்தப் பக்கம் இருந்து அமுதவல்லி கற்றாள். திட்டம் கலைந்தது ஒரு நாள் பாடம் கற்பிப்பதற்கு உதாரன் வந்தான். அங்கே இருந்த சோலையின் அருகில் நின்றான். வானத்தில் நிலவு வந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட உதாரனின் கவிதை உள்ளம் கவ...

மனோன்மணீயம் - கதைச் சுருக்கம்

படம்
பாண்டிய நாட்டு மன்னன் சீவகன் . கள்ளம் கவடு அறியாத அருங்குணச் செம்மல். அவனது தலைமை அமைச்சர் பெயர் குடிலன் . சூழ்ச்சித் திறனும் தீய குணங்களும் படைத்தவன் ! மன்னனிடம் நல்லவன் போல் நடித்து, அவனைத் தன்வயப்படுத்திக் கொண்டான். மன்னனைக் கவிழ்த்து விட்டு, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டிச் செயல்படலானான். இதற்கு முதற்படியாகப் பாண்டிய நாட்டின் தலைநகரை மதுரையிலிருந்து நெல்லைக்கு மாற்றி, அங்கு கோட்டை கொத்தளங்களை உருவாக்கினான் ! பாண்டிய மன்னன் சீவகனின் குலகுரு சுந்தர முனிவர் . குடிலனில் நடவடிக்கைகளில் ஐயம் கொண்ட அவர், நெல்லைக்குத் தன் குடியிருப்பை மாற்றிக் கொண்டு, மன்னனுக்குப் பாதுகாப்பாக இருக்கத் துணிந்தார். நெல்லை அரண்மனையில் சுந்தர முனிவருக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டது ! பாண்டிய மன்னன் சீவகனின் மகள் மனோன்மணி . அவளது தோழி. வாணி . நடராசன் என்னும் நற்குண நம்பி மனோன்மணியின் தோழி வாணியைக் காதலித்தான் ! நடராசனின் தந்தை சகடன் . இவர் தனது மகளை (நடராசனின் தங்கையை)தலைமை அமைச்சர் குடிலனின் மகன் பலதேவனுக்கு மணம் செய்வித்து, அதன் மூலம் தனக்கு செல்வத்தையும் செல்வாக்கையும் த...

ஆடு கோழி - புதிர்

படம்
  ஒரு விவசாயிக்கு கோழிகள் மற்றும் ஆடுகள் உள்ளன.  அவற்றுக்கு 22 தலைகளும் 56 கால்களும் உள்ளன.  விவசாயி வைத்திருக்கும் ஒவ்வொரு விலங்குகளின் எண்ணிக்கை என்ன?

எடை என்ன? - புதிர்

படம்
  புகைப்படத்தில் உள்ள மூன்று விலங்குகளின் எடை என்ன?

கண்ணாடிக் குவளைகள் - புதிர்

படம்
  ஒரு வரிசையில் ஆறு கண்ணாடிக் குவளைகள் உள்ளன.  முதல் மூன்று பால் நிரப்பப்பட்டிருக்கும்,  அடுத்த மூன்று காலியாக உள்ளன.  ஒரு கண்ணாடிக் குவளையை மட்டும் நகர்த்தலாம்.  பால் நிரம்பியதும் காலியானதுமாக மாறி மாறி ஆறு கண்ணாடிக் குவளைகளும் அமைய வேண்டும்.  எப்படி ?

தந்தை & மகன் - புதிர்

படம்
  ஒரு தந்தை தனது மகனிடம் நான் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் நீ சரியான பதிலை கூறினால் நான் உனக்கு 5 ரூபாய் தருவேன், தவறான பதிலை கூறினால் நீ எனக்கு 8 ரூபாய் தர வேண்டும் என்றார்.  அவர் மொத்தம் 26 கேள்விகள் அவனிடம் கேட்டார்.  26 கேள்விகள் முடிவில் இருவரும் எந்த பணமும் கொடுக்கவுமில்லை, வாங்கவுமில்லை அது எப்படி?

பெரிய குடும்பம் - புதிர்

படம்
  ஒரு பெரிய குடும்பத்தில் நிறைய சகோதரர்களும் சகோதரிகளும் உள்ளனர்.  ஒருவனுக்கு எத்தனை சகோதரர்கள் உள்ளனரோ அதே எண்ணிக்கையில் சகோதரிகளும் உள்ளனர்.  ஆனால், ஒரு சகோதரிக்கு எத்தனை சகோதரிகள் உள்ளனரோ அதில் பாதி எண்ணிக்கையில் தான் சகோதரிகள் உள்ளனர்.  அப்படியென்றால் அவர்களில் சகோதரிகள்? சகோதரர்கள் எத்தனை பேர்?

மாலை நேரச் சூரியன் - புதிர்

படம்
  ஒருவர் கடற்கரை வழியே சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் போது அவரின் வலது பக்கம் சூரியன் மறைந்தது. அப்போது அவர் சென்ற திசை என்ன?

எண்கள் - புதிர்

படம்
  மூன்று எண்கள்.  அவற்றைக்  கூட்டினாலும் பெருக்கினாலும் ஒரே விடை வரும். அந்த எண்கள் எவை?

பல்லி - புதிர்

படம்
  ஒரு கம்பம்.  அதன் உயரம் 13 அடி.  குட்டிப் பல்லி அதன் மீது ஏறி விளையாடுகிறது. நிமிடத்திற்கு 3 அடி ஏறும், 2 அடி சறுக்கும். அப்படியானால் அது உச்சிக்குப் போக எத்தனை நிமிடங்கள் ஆகும் ?

2 லிட்டர் பால் - புதிர்

படம்
ஒரு 5 லிட்டர் குவளை, ஒரு 8 லி குவளை மட்டும்தான் உங்களிடம் உள்ளது.  ஒருவருக்கு 2லிட்டர் பால் கொடுக்க வேண்டும்.  இருக்கின்ற குவளைகளை வைத்துக்கொண்டு எவ்வாறு கொடுக்கலாம்?

ஒரு ரூபாய் - புதிர்

படம்
கு மாரும் மணியும் பள்ளிக்கு போகிற வழியில ஒரு ரூபாய் கீழே கிடந்தது.  குமார்தான் முதல்ல பார்த்து மணிகிட்ட சொன்னான்.  உடனே மணி அதை எடுத்தான்.  ஆளுக்கு 50 காசு எடுத்துப்போம் என்று குமார் சொன்னான்.  நான்தானே எடுத்தேன் அதனால எனக்கு 10 காசு அதிகமா வேணும் என்றான் மணி.  சற்று யோசித்த குமார் சரி என்றான்.  அவர்கள் அவ்வாறே பிரித்துக்கொண்டனர்.  இப்போது குமாரிடம் எத்தனை பைசா மணியிடம் எத்தனை பைசா இருக்கும் ?

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

படம்
கொடுக்கப்பட்டுள்ள படத்தில்,  1 வது நபர் கார் வருவது தெரியாமல் சாலையை கிராஸ் செய்கிறார்.  2 வது நபர் குறுக்கே மரம் இருப்பது தெரியாமல் வேறு திசையை பார்த்துக்கொண்டு செல்கிறார்.  3 வது நபர் தரையில் கத்தி போன்ற ஆயுதம் கிடப்பது தெரியாமல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு செல்கிறார். 4 வது நபர் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையில் காலை விடுவது போல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு செல்கிறார்.  இப்படி 4 பேரும் ஒரு ஆபத்தில் சிக்கியுள்ளனர். 4 பேருக்குமே பாதிப்பு ஏற்படும் என்று இருக்கையில் இவர்களில் ஒரு நபருக்கு மட்டும் எந்த பாதிப்பு ஏற்படாது.  அது எந்த நபருக்கு என்பதையும், அது எப்படி என்பதையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்? குறிப்பு : கார் ஓட்டுநர் இல்லை

சிறு துரும்பும் பல் குத்த உதவும் - வாழ்க்கை நிகழ்வு

படம்
பழமொழி விளக்கம்  எத்தகைய சிறிய பொருளும், ஏதேனும் ஒரு வகையில் பயன்பாடுடையதாக இருக்கும். வாழ்க்கை நிகழ்வு எங்கள் அண்டை வீட்டுக்காரர் ஒரு நோயாளி. அவர், தினமும் தனக்குத்தானே ஊசி போட்டுக் கொள்வார். காலியான குப்பியை எங்கள் வீட்டின் எல்லைக்குள் தூக்கிப்போட்டு விடுவார். "உன் மருந்து பாட்டில் குப்பியை, என் வீட்டுக்குள் ஏன் ஐயா போடுகிறாய்?" என்று எங்கள் அப்பா அவரிடம் கடுமையாகப் பேசுவதுண்டு. அவர், கேட்பதே இல்லை. அப்பாவின் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பதற்காகவே, அந்தச் சிறு குப்பிகளை ஒரு சாக்குப்பையில் நான் சேகரிக்கத் தொடங்கினேன். எங்கள் பள்ளியில் வீணாகும் பொருட்களில் கலைப்பொருட்கள் உருவாக்கும் போட்டி நடந்தது. என்னிடமிருந்த அந்த மருந்துக் குப்பிகளைக் கொண்டு தாஜ்மஹால் கட்டிடம் உருவாக்கினேன்; கண்டவர் வியந்தனர். போட்டி நடுவர்கள், இந்தக் குப்பிகளை இப்படியும் பயன்படுத்தலாமா? அழகாக உள்ளது!" என்று பாராட்டினர். முதல் பரிசு எனக்கே கிடைத்தது. வெற்றிச் சான்றிதழை அப்பாவிடம் காண்பித்தேன். அவர் என்னை அணைத்துக்கொண்டு "சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை மெய்ப்பித்து விட்டாயடா!...

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை - வாழ்க்கை நிகழ்வு

படம்
பழமொழி விளக்கம்  அனைவரும் ஒன்றுசேர்ந்து கூடி வாழ்ந்தால் பல நன்மைகள் கிடைக்கும். வாழ்க்கை நிகழ்வு நான்கு மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு. எங்கள் வீட்டிற்கு முன், எப்பொழுதும் சாக்கடை ஓடிக்கொண்டிருக்கும். திடீரென்று ஒரு நாள் ஏதோ அடைத்துக்கொண்டு சாக்கடை ஓடாமல், வீதி முழுக்க துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அங்கு குடியிருந்தவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். என் தந்தை, ஊராட்சி அலுவலகம் சென்று சாக்கடையைச் சுத்தம் செய்ய விண்ணப்பம் கொடுத்தார். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி அலுவலர்கள் பதிலளித்தனரே தவிர, மூன்று நாட்களாகியும் சாக்கடையை சுத்தம் செய்ய பணியாளர்கள் யாரும் வரவில்லை. மறுநாள் என் தந்தை, வீதியில் உள்ள அனைவரிடமும், 'வீட்டுக்கு ஒருவர் வாருங்கள், சாக்கடையை நாமே சுத்தம் செய்வோம்' என்று பேசினார். யாரும் செவிமடுக்கவில்லை. இப்படியே மேலும் இரண்டு நாள் கடந்து போனது. ஒரு நாள் காலையில், என் தந்தை எங்கள் வீட்டிற்கு முன்னால் இருக்கும் சாக்கடையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரரும் அவர் வீட்டுக்கு முன்னால் இருந்த சாக்கடையைச் சுத்தப்படுத்தினார...

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் - வாழ்க்கை நிகழ்வு

படம்
பழமொழி விளக்கம்  வாய்ப்புக் கிடைக்கும்பொழுது பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வாழ்க்கை நிகழ்வு என் சித்தப்பா அரியலூரில் ஆயத்த ஆடையகம் வைத்திருக்கிறார். அவர், தீபாவளி வரப்போகும் ஒரு மாதத்திற்கு முன்பே மிகுதியான விளம்பரங்களைக் கொடுத்தார். ஒருவாரம் முன்பாக ஏராளமான பரிசுத் திட்டங்களை அறிவித்தார். அவர் மனைவி, "இவ்வளவு செலவில் விளம்பரம் அவசியமா? சாதாரண நாட்களில் விற்பதைவிட இப்போது குறைந்த விலைக்கு இலாபம் வைத்து விற்கிறீர்களே!" என்று நொந்து கொண்டார். அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அவர், கருமமே கண்ணாக இருந்தார். ஆண்டு முழுக்க விற்கப்படும் துணிகளை விட, அந்த ஒருவாரத்தில் அதிகமான துணிகளை விற்றார். ஓர் ஆண்டு முழுக்க கிடைக்கும் வருமானத்தை, ஒரே வாரத்தில் ஈட்டினார். வருமானத்தைத் தன் மனைவியிடம் காட்டிப் பெருமைப்பட்டுக் கொண்ட என் சித்தப்பா, "இதற்குப் பெயர்தான் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுதல்" என்றார்.