சிறு துரும்பும் பல் குத்த உதவும் - வாழ்க்கை நிகழ்வு
பழமொழி விளக்கம்
எத்தகைய சிறிய பொருளும், ஏதேனும் ஒரு வகையில் பயன்பாடுடையதாக இருக்கும்.
வாழ்க்கை நிகழ்வு
எங்கள் அண்டை வீட்டுக்காரர் ஒரு நோயாளி. அவர், தினமும் தனக்குத்தானே ஊசி போட்டுக் கொள்வார். காலியான குப்பியை எங்கள் வீட்டின் எல்லைக்குள் தூக்கிப்போட்டு விடுவார். "உன் மருந்து பாட்டில் குப்பியை, என் வீட்டுக்குள் ஏன் ஐயா போடுகிறாய்?" என்று எங்கள் அப்பா அவரிடம் கடுமையாகப் பேசுவதுண்டு. அவர், கேட்பதே இல்லை. அப்பாவின் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பதற்காகவே, அந்தச் சிறு குப்பிகளை ஒரு சாக்குப்பையில் நான் சேகரிக்கத் தொடங்கினேன். எங்கள் பள்ளியில் வீணாகும் பொருட்களில் கலைப்பொருட்கள் உருவாக்கும் போட்டி நடந்தது. என்னிடமிருந்த அந்த மருந்துக் குப்பிகளைக் கொண்டு தாஜ்மஹால் கட்டிடம் உருவாக்கினேன்; கண்டவர் வியந்தனர். போட்டி நடுவர்கள், இந்தக் குப்பிகளை இப்படியும் பயன்படுத்தலாமா? அழகாக உள்ளது!" என்று பாராட்டினர். முதல் பரிசு எனக்கே கிடைத்தது. வெற்றிச் சான்றிதழை அப்பாவிடம் காண்பித்தேன். அவர் என்னை அணைத்துக்கொண்டு "சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை மெய்ப்பித்து விட்டாயடா!" என்று பாராட்டினார்.
%20(7).jpeg)
கருத்துகள்
கருத்துரையிடுக