இடுகைகள்

மாணவர்கள் கற்கும் முறை

படம்
  ஆசிரியரிடம் பாடம் கேட்ட பின்னர், பாடநூலை மாணவன் எவ்வாறு பயில வேண்டும் என்று நன்னூல் விளக்குகிறது. நூல்பயில் இயல்பே நுவலின் வழககறிதல் பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் ஆசான் சார்ந்தவை அமைவரக் கேட்டல் அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மடநனி இகக்கும். ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பின் பெருக நூலில் பிழைபா டிலனே.  முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்  ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் காற்கூ றல்லது பற்றல னாகும். - நன்னூல் 44 மாணவன் தான் பயின்ற நூலின் வழக்கு, உலக வழக்கு ஆகியனவற்றை அறிந்துகொள்ளும் வகையில் பயிலவேண்டும்.  தான் படித்த பாடங்களை மறவாமல் போற்றுதல் வேண்டும். ஆசியரிடம் கேட்ட கருத்துகளை மீண்டும் நினைவிற்கு கொண்டுவந்து ஆராய வேண்டும். அவ்வாறு சிந்திக்கும்போது எழுந்த ஐயங்களை மீண்டும் ஆசிரியரைச் சந்தித்துக் கேட்டுத் தெளிதல் வேண்டும்.  தன்னோடு பயிலும் மாணவருடன் சேர்ந்து பயிலுதல் வேண்டும். அவ்வாறு பயிலும்போது எழும் சந்தேகங்களை அவர்களிடமே கேட்டுத் தெளிதல் வேண்டும். உடன் பயில்பவர்களின் ஐயங்களைப் போக்க உதவுதல் வேண்டும்....

மாணவர்கள் பாடங்கேட்கும் முறை

படம்
  மாணவர்கள் பாடங்கேட்கும் முறை என்ன என்பதை நன்னூல் பின்வருமாறு விளக்குகிறது. கோடல் மரபே கூறும் காலைப் பொழுதொடு சென்று வழிபடல் முனியான் குணத்தொடு பழகி அவன்குறிப் பிற்சார்ந்து இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப் பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச் சித்திரப் பாவையின் அத்தக வடங்கிச் செவிவா யாக நெஞ்சுகளன் ஆகக் கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப் போவெனப் போதல் என்மனார் புலவர். - நன்னூல் 40 ஆசிரியர் சொன்ன நேரத்தில் மாணவன் வகுப்புக்கு வரவேண்டும். முதலில் ஆசிரியரை வழிபட வேண்டும்.  ஆசிரியரின் குணமறிந்து நடந்துகொள்ள வேண்டும். ஆசிரியரின் குறிப்புணர்ந்து செயல்படவேண்டும். இவ்விடம் அமர்ந்துகொள் என்று அவர் கூறியபிறகே அமரவேண்டும். படி என்று அவர் சொல்லியபிறகே பாடத்தைப் படித்தல் வேண்டும். தாகம் கொண்டவன் தண்ணீரைக் கண்டதும் ஆர்வத்துடன் பருகுவதைப் போலப் பாடத்தில் ஆர்வம் மிகுந்தவனாக இருக்கவேண்டும். சித்திரப்பாவை போல ஆசிரியர்முன் அடக்கத்துடன் இருக்கவேண்டும். ஆசிரியர் சொல்லும் பாடம் கேட்கும்போது மாணவனுக்கு காது வாயாகவும் மனம் வயிறாகவும் இருக்கவேண்டும். முதல்நாள் ஆசிரியரிடம் கேட்டவற்றில் கொண்டுள்ள ...

நன்னூல் கூறும் மாணவர்கள்

படம்
  சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழ் இலக்கண நூல் நன்னூல். இதை இயற்றியவர் பவணந்தியார்.  அவர் படிக்கும் மாணவர்களை மூன்று பிரிவாக வகைபடுத்தி உள்ளார்.  மூவகை மாணவர்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். மூவகை மாணவர்கள்  1. முதல் மாணாக்கர் - அன்னம், பசு 2. இடை மாணாக்கர் - கிளி, நிலம் 3. கடை மாணாக்கர் - ஆடு, எருமை, பன்னாடை, ஓட்டைக்குடம்  முதல் மாணாக்கர் அன்னம் பாலும், தண்ணீரும் கலந்து இருக்கும் போது , பாலை மட்டும் குடிப்பது அன்னப்பறவை. அது போல் "மெய்பொருள் காண்பது அறிவு" என்ற வள்ளுவன் சொல்லுக்கேற்ப தேவை இல்லாததை விட்டு விட்டு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளும். பசு   புல் கிடைக்கும் போது , அனைத்தையும் வேகமாக மேய்ந்து விட்டு பிறகு மெதுவாக அசை போட்டு (regurgitate) உண்ணும். அதாவது ஆசிரியரையோ, புத்தகத்தையோ கண்டால் அவரிடமிருந்து அனைத்து அறிவையும் வேகமாக பெற்றுக் கொண்டு பிறகு மெதுவாக ஆராய்ந்து , சிந்தித்து தெளிவு பெறுவர். இடை மாணாக்கர் கிளி   கிளி சொன்னதையே சொல்லும். அது போல் இவ்வகை மாணவன் ஆசிரியர் சொன்னதை அப்படியே கேட்டு மனப்பாடம் செய்து ஒ...

புரட்சிக் கவி - கதைச் சுருக்கம்

படம்
  மன்னன் ஒருவன் தனது மகள் அமுதவல்லி என்பவளுக்குத் தமிழ்க் கவிதை புனையும் ஆற்றலைக் கற்பிக்க விரும்பினான். அமுதவல்லிக்குத் தமிழ்க் கவிதை கற்பிக்கச் சிறந்தவன், உதாரன் என்பவன் ஆவான் என்று அமைச்சர் தெரிவித்தார். ஆனால் அவன் இளைஞன்; நல்ல அழகன் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். மன்னனின் திட்டம் இளமை வாய்ந்த அமுதவல்லியும் இளைஞனான உதாரனும் நேரில் சந்திக்கக் கூடாது என்று மன்னன் கருதினான். எனவே, அமுதவல்லி தொழு நோயாளி என்று உதாரனிடம் தெரிவித்தான். உதாரன், குருடன் என்று அமுதவல்லியிடம் தெரிவித்தான். குருடனை நேரில் பார்ப்பது அபசகுனம். எனவே இருவருக்கும் இடையில் ஒரு திரையைக் கட்டித் தொங்க விடுங்கள் என்று தெரிவித்தான். அதன்படி அமுதவல்லிக்கும் உதாரனுக்கும் இடையில் ஒரு திரை கட்டித் தொங்க விடப்பட்டது. திரைக்கு இந்தப்பக்கம் இருந்து உதாரன் கவி புனையும் திறனைக் கற்பித்தான். திரைக்கு அந்தப் பக்கம் இருந்து அமுதவல்லி கற்றாள். திட்டம் கலைந்தது ஒரு நாள் பாடம் கற்பிப்பதற்கு உதாரன் வந்தான். அங்கே இருந்த சோலையின் அருகில் நின்றான். வானத்தில் நிலவு வந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட உதாரனின் கவிதை உள்ளம் கவ...

மனோன்மணீயம் - கதைச் சுருக்கம்

படம்
பாண்டிய நாட்டு மன்னன் சீவகன் . கள்ளம் கவடு அறியாத அருங்குணச் செம்மல். அவனது தலைமை அமைச்சர் பெயர் குடிலன் . சூழ்ச்சித் திறனும் தீய குணங்களும் படைத்தவன் ! மன்னனிடம் நல்லவன் போல் நடித்து, அவனைத் தன்வயப்படுத்திக் கொண்டான். மன்னனைக் கவிழ்த்து விட்டு, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டிச் செயல்படலானான். இதற்கு முதற்படியாகப் பாண்டிய நாட்டின் தலைநகரை மதுரையிலிருந்து நெல்லைக்கு மாற்றி, அங்கு கோட்டை கொத்தளங்களை உருவாக்கினான் ! பாண்டிய மன்னன் சீவகனின் குலகுரு சுந்தர முனிவர் . குடிலனில் நடவடிக்கைகளில் ஐயம் கொண்ட அவர், நெல்லைக்குத் தன் குடியிருப்பை மாற்றிக் கொண்டு, மன்னனுக்குப் பாதுகாப்பாக இருக்கத் துணிந்தார். நெல்லை அரண்மனையில் சுந்தர முனிவருக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டது ! பாண்டிய மன்னன் சீவகனின் மகள் மனோன்மணி . அவளது தோழி. வாணி . நடராசன் என்னும் நற்குண நம்பி மனோன்மணியின் தோழி வாணியைக் காதலித்தான் ! நடராசனின் தந்தை சகடன் . இவர் தனது மகளை (நடராசனின் தங்கையை)தலைமை அமைச்சர் குடிலனின் மகன் பலதேவனுக்கு மணம் செய்வித்து, அதன் மூலம் தனக்கு செல்வத்தையும் செல்வாக்கையும் த...

ஆடு கோழி - புதிர்

படம்
  ஒரு விவசாயிக்கு கோழிகள் மற்றும் ஆடுகள் உள்ளன.  அவற்றுக்கு 22 தலைகளும் 56 கால்களும் உள்ளன.  விவசாயி வைத்திருக்கும் ஒவ்வொரு விலங்குகளின் எண்ணிக்கை என்ன?