கூடி வாழ்ந்தால் கோடி நன்மை - வாழ்க்கை நிகழ்வு
பழமொழி விளக்கம் அனைவரும் ஒன்றுசேர்ந்து கூடி வாழ்ந்தால் பல நன்மைகள் கிடைக்கும். வாழ்க்கை நிகழ்வு நான்கு மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு. எங்கள் வீட்டிற்கு முன், எப்பொழுதும் சாக்கடை ஓடிக்கொண்டிருக்கும். திடீரென்று ஒரு நாள் ஏதோ அடைத்துக்கொண்டு சாக்கடை ஓடாமல், வீதி முழுக்க துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அங்கு குடியிருந்தவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். என் தந்தை, ஊராட்சி அலுவலகம் சென்று சாக்கடையைச் சுத்தம் செய்ய விண்ணப்பம் கொடுத்தார். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி அலுவலர்கள் பதிலளித்தனரே தவிர, மூன்று நாட்களாகியும் சாக்கடையை சுத்தம் செய்ய பணியாளர்கள் யாரும் வரவில்லை. மறுநாள் என் தந்தை, வீதியில் உள்ள அனைவரிடமும், 'வீட்டுக்கு ஒருவர் வாருங்கள், சாக்கடையை நாமே சுத்தம் செய்வோம்' என்று பேசினார். யாரும் செவிமடுக்கவில்லை. இப்படியே மேலும் இரண்டு நாள் கடந்து போனது. ஒரு நாள் காலையில், என் தந்தை எங்கள் வீட்டிற்கு முன்னால் இருக்கும் சாக்கடையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரரும் அவர் வீட்டுக்கு முன்னால் இருந்த சாக்கடையைச் சுத்தப்படுத்தினார...
கருத்துகள்
கருத்துரையிடுக