நிறுத்தக்குறிகள்
- “மறைமலையடிகள் மரணத்தின்பின் மனிதர்நிலை என்னும்நூலை இயற்றினார்"
- மறைமலையடிகளார் எழுதிய நூல்களை அறிந்திராத ஒருவர், நிறுத்தக்குறிகள் இடம்பெறாத இத்தொடரைப் படிக்கும்போது
- மரணத்துக்குப்பின் அவர் எப்படி நூல் எழுத முடியும்? என்று வினவுவார். ஆனால்,
- மறைமலையடிகள், 'மரணத்தின்பின் மனிதர்நிலை என்னும் நூலை இயற்றினார். என்று எழுதும்போது பொருள் தெளிவாகிவிடும்.
- எனவே, நிறுத்தக்குறிகள் ஒரு தொடரில் உள்ள பொருள்வேறுபாட்டை உணர்த்துவதற்கு அடிப்படையாக விளங்குகின்றன.
- பல்வேறு வகையான நிறுத்தக்குறிகளை நமக்கு அறிமுகப்படுத்தி எவ்வெவ்விடங்களில் அவற்றைப் பயன்படுத்த வேண்டுமென விளக்கியவர்கள் ஐரோப்பியர்களே ஆவர்.
காற்புள்ளி ( , )
- பொருள்களைத் தனித்தனியாகக் குறிப்பிடும் இடங்கள்,
- எச்சச் சொற்றொடர்கள்,
- இணைப்புச்சொற்கள்,
- திருமுகவிளி முதலிய இடங்களில் காற்புள்ளி வருதல் வேண்டும்.
● நாம் எழுதும்போது, பிழையற எழுத வேண்டும்.
● இனியன் நன்கு படித்தான்; அதனால், தேர்ச்சி பெற்றான்.
● ஐயா; அம்மையீர்,
முற்றுப்புள்ளி ( . )
- தொடரின் இறுதி,
- முகவரி இறுதி,
- சொற்குறுக்கம்,
- நாள் முதலிய இடங்களில் முற்றுப்புள்ளி வருதல் வேண்டும்.
● தலைமையாசிரியர், அரசு மேனிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.
● தொல் சொல்.58.
● 18/02/2018.
முக்காற்புள்ளி ( : )
- சிறுதலைப்பு,
- நூற்பகுதி எண்,
- பெருங்கூட்டுத் தொடர் முதலிய இடங்களில் முக்காற்புள்ளி வருதல் வேண்டும்.
● பத்துப்பாட்டு 2:248
● எட்டுத்தொகை என்பன வருமாறு:
அரைப்புள்ளி ( ; )
- தொடர்நிலைத் தொடர்களிலும்
- ஒரு சொல்லுக்கு வேறுபட்ட பொருள் கூறும் இடங்களிலும் அரைப்புள்ளி வருதல் வேண்டும்.
● சீர் - மாறுபாடு இல்லாதது; அளவு; இயல்பான தன்மை; ஒழுங்கு; சமம்; நேர்த்தி; அழகு; சீதனம்; செய்யுளின் உறுப்பு
வினாக்குறி ( ? )
ஒரு வினாத்தொடர்,
● நீ வருகிறாயா? என்று கேட்டான். (நேர்கூற்றுத் தொடர்)
- முற்றுத்தொடராகவும்
- நேர்கூற்றுத் தொடராகவும், இருப்பின், இறுதியில் வினாக்குறி வருதல் வேண்டும்.
● நீ வருகிறாயா? என்று கேட்டான். (நேர்கூற்றுத் தொடர்)
வியப்புக்குறி ( ! )
- வியப்பிடைச் சொல்லுக்குப் பின்பும்
- நேர்கூற்று வியப்புத்தொடர் இறுதியிலும்
- அடுக்குச் சொற்களின் பின்னும் வியப்புக்குறி வருதல் வேண்டும்.
● என்னே தமிழின் பெருமை! என்றார் கவிஞர்
● வா! வா! வா! போ! போ! போ!
விளிக்குறி ( ! )
- அண்மையில் இருப்பாரை அழைப்பதற்கும்,
- தொலைவில் இருப்பாரை அழைப்பதற்கும் விளிக்குறி பயன்படுத்த வேண்டும்.
- வியப்புக்குறியும் விளிக்குறியும் ஒரே அடையாளக்குறி உடையன.
● அவைத்தலைவீர் !
ஒற்றை மேற்கோள்குறி ( ' ' )
- ஓர் எழுத்தேனும் சொல்லேனும் சொற்றொடரேனும் தன்னையே குறிக்கும் இடம்,
- கட்டுரைப்பெயர்,
- நூற்பெயர் குறிக்கும் இடம்,
- பிறர் கூற்றுப்பகுதிகள் முதலான இடங்களில் ஒற்றைக்குறி வருதல் வேண்டும்.
● பேரறிஞர் அண்ணா 'செவ்வாழை' என்னும் சிறுகதை எழுதினார்.
● 'கம்பனும் மில்டனும்' என்னும் நூல் சிறந்த ஒப்பீட்டு நூல் ஆகும்.
● 'செவிச்செல்வம் சிறந்த செல்வம்' என்பர்.
இரட்டை மேற்கோள்குறி ( " " )
- நேர்கூற்றுகளிலும்
- மேற்கோள்களிலும் இரட்டைக்குறி வருதல் வேண்டும்.
● “ஒழுக்கமுடைமை குடிமை" என்றார் வள்ளுவர்.
%20(12).jpeg)
கருத்துகள்
கருத்துரையிடுக