சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழ் இலக்கண நூல் நன்னூல். இதை இயற்றியவர் பவணந்தியார். அவர் படிக்கும் மாணவர்களை மூன்று பிரிவாக வகைபடுத்தி உள்ளார். மூவகை மாணவர்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். மூவகை மாணவர்கள் 1. முதல் மாணாக்கர் - அன்னம், பசு 2. இடை மாணாக்கர் - கிளி, நிலம் 3. கடை மாணாக்கர் - ஆடு, எருமை, பன்னாடை, ஓட்டைக்குடம் முதல் மாணாக்கர் அன்னம் பாலும், தண்ணீரும் கலந்து இருக்கும் போது , பாலை மட்டும் குடிப்பது அன்னப்பறவை. அது போல் "மெய்பொருள் காண்பது அறிவு" என்ற வள்ளுவன் சொல்லுக்கேற்ப தேவை இல்லாததை விட்டு விட்டு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளும். பசு புல் கிடைக்கும் போது , அனைத்தையும் வேகமாக மேய்ந்து விட்டு பிறகு மெதுவாக அசை போட்டு (regurgitate) உண்ணும். அதாவது ஆசிரியரையோ, புத்தகத்தையோ கண்டால் அவரிடமிருந்து அனைத்து அறிவையும் வேகமாக பெற்றுக் கொண்டு பிறகு மெதுவாக ஆராய்ந்து , சிந்தித்து தெளிவு பெறுவர். இடை மாணாக்கர் கிளி கிளி சொன்னதையே சொல்லும். அது போல் இவ்வகை மாணவன் ஆசிரியர் சொன்னதை அப்படியே கேட்டு மனப்பாடம் செய்து ஒ...
கருத்துகள்
கருத்துரையிடுக